முஸ்லிம் சமூகத்தின் விருப்பமின்றி முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை மாற்றக் கூடாது

முஸ்லிம் சமூகத்தினதும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் விருப்பத்திற்கு மாற்றமாக முஸ்லிம் தனியார் விவாக விவாகரத்து சட்டத்தை திருத்தக் கூடாதென பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

முஸ்லிம் எம்.பிகளுடன் பேசியே தேவையான மாற்றங்களை செய்ய வேண்டுமென்றும் அவர் கோரினார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பயங்கரவாத தடைச் சட்டம் சிறுபான்மையினரின் உரிமைகளை மீறும் மத உரிமைகள் மீறப்படும் விடயங்களுக்கு பயன்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் கடும் போக்குடன் உள்ளது.பயங்கரவாத தடைச்சட்டத்தில் பாரிய மாற்றங்களை செய்யப்போவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நிச்சயமாக அதனை செய்ய வேண்டும். காரணமின்றி அரசியல் தலைவர்களை கைது செய்வது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. தமிழ் அரசியல் கைதிகள் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார்கள். ஏனைய தமிழ் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

முஸ்லிம் தனியார் விவாக விவாகரத்து சட்டத்தை திருத்துவதற்கு நீதி அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.இது தொடர்பில் 10 எம்.பிகள் அவரை சந்தித்து பேசினோம்.

சில திருத்தங்களை செய்வதாக அவர் உறுதியளித்தார். ஆனால் கிழக்கு மாகாண ஜம்மியதுல் உலமா தலைவர் எம்முடன் தொடர்பு கொண்டார்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் விருப்பத்திற்கு மாற்றமாக இதனை செய்ய வேண்டாம். காதி நீதிமன்றம் என்ற பெயரில் மயக்கம் இருக்கலாம். அங்கு இருப்பது நீதிபதி அல்ல.அந்த விசாரணை முறையை ஒழிப்பது தவறான விடயம்.திருமணம் தொடர்பான சட்ட திட்டங்களை முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பேசியே இதனை செய்ய வேண்டும்என்றார்.

ஷம்ஸ் பாஹிம் சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...