யாழில் ரூ. 29 மில்லியன் கேரள கஞ்சாவுடன் மூன்று நபர்கள் கைது

யாழ்ப்பாணம், கோவிலம் கடற்பகுதியில் கடற்படையினர் நேற்று காலை நடத்திய சிறப்பு சோதனையில் 98 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது டிங்கி படகொன்றையும் கடற்படையினர் கைப்பற்றினர்.கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 29 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட மூவரும், கிராஞ்சி, பேசாலை மற்றும் பூநகரி பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைதான சந்தேக நபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு என்பவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...