4,000ஆவது தொலைபேசி கோபுரத்தை திறந்து தனித்துவ மைல்கல்லை எட்டிய Dialog | தினகரன்

4,000ஆவது தொலைபேசி கோபுரத்தை திறந்து தனித்துவ மைல்கல்லை எட்டிய Dialog

4,000ஆவது தொலைபேசி கோபுரத்தை திறந்து தனித்துவ மைல்கல்லை எட்டிய Dialog-Dialog 4000th Tower Milestone
இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனநாயக்க மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம தொழிநுட்ப அதிகாரி பிரதீப் அல்மேதா ஆகியோர் குருணாகல் ‘திஹவ’வில் நிறுவப்பட்ட 40 மீற்றர் உயரம் கொண்ட தொடர்பு கோபுரத்தின் சேவைகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைப்பதை காணலாம்.

- ‘கொவிட்-19’பரவல் காலத்தில் ரூபா 50 பில்லியன் செலவில் சாதனைமிகு முதலீடு.

அனைத்து இலங்கையர்களையும் ஒருவரோடொருவர் இணைத்து, முழு நாட்டையும் டிஜிட்டல் வசதிகள் பொருந்திய நாடாக வலுப்படுத்தும் தனது இலக்கிற்கு அமைய, இந்நாட்டில் பரந்த வலையமைப்பிற்கு உரித்துடைமை கொண்ட டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி தனது 4,000 ஆவது தொலைபேசி கோபுரத்தை குருணாகல் மாவட்டத்தின் ‘திஹவ’என்ற கிராமத்தில் திறந்து வைத்துள்ளது. அவ்வாறே, இப்பிரதேச மக்களின் வசதிகருதி மேலும் ‘கவரேஜ்’ வசதிகளை விரிவுபடுத்தியும் வருகின்றது.

இலங்கை பூராவும் ‘கவரேஜ்’வசதியை விரிவுபடுத்தும் தனது முயற்சிகளுக்கு சமாந்தரமாகவும் தற்போது நாட்டில் நிலவும் கொவிட் -19 பரவல் சு10ழ்நிலையிலும் பாவனையாளர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு டயலொக் ஆசிஆட்டா தொலைத்தொடர்பு கோபுர வலையமைப்பில் மேலும் 515  கோபுரங்களை இணைத்து இவ்வாறு 4000 ஆவது கைபேசி 4G கோபுரத்தை நிறுவுவதற்கு டயலொக் நிறுவனத்திற்கு சாத்தியப்பட்டுள்ளதுடன், இது இலங்கையின் அதிக எண்ணிக்கையிலான தொலைத்தொடர்பு கோபுரங்களைக் கொண்டதான வலையமைப்பாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தூரப்பிரதேச கிராமங்களில் வசித்து வருகின்ற சமூகத்தினரின் தேவைகளை கருத்திற்கொண்டு தனது ‘கவரேஜ்’ வசதிகளை விரைவுபடுத்துவதுடன் நகர்ப்புறங்களிலும் அவசர கொள்திறன் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் ஏதுவான வகையில் ‘டயலொக்’ இனால் Lamp Pole போன்ற அதிதிறன்கூடிய தொழில்நுட்ப வழிமுறைகளும் கையாளப்பட்டு வருகின்றன.

இத்தோடு இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் ‘கிராமத்திற்கு தொலைத்தொடர்பு வசதி’ எனும் திட்டத்துடன் இணைந்தவாறு எதிர்வரும் ஆறுமாதங்களுள் மேலும் 450 தொட்ர்பு கோபுரங்களை தனது பாரிய தொடர்பு கோபுர வலையமைப்புடன் புதிதாக இணைப்பதுடன் நடப்பு 2021ஆம் வருட இறுதியின் போது இந்நாட்டின் சனத்தொகையில் 95% ஆனோரை 4G மூலம் பிணைத்திட முடியும் என எதி;பார்க்கப்படுகின்றது.

தற்போதைய ‘கொவிட்-19’ சூழ்நிலையின் கீழ் டயலொக் வலையமைப்பிடம் மேற்கொள்ளப்பட்ட 100% ஆக அதிகரித்த ‘டேட்டா’ தேவைகள் மற்றும் 200% ஆக அதிகரித்த ‘நிலையான டேட்டா’ தேவைகள் ஆகியனவற்றை வழங்குவதற்கு டயலொக் தொலைத்தொடர்பு வலையமைப்பிற்கு சாத்தியப்பட்டதுடன் இந்நாட்டின் கைபேசி ‘டேட்டா’ பாவனையில் 60% ஐ டயலொக் நிறுவனமே வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. பாரிய அளவில் அதிகரித்துச்செல்கின்ற இந்த கேள்விகளை (கோரிக்கைகள்) நிறைவேற்றும் நோக்கில் புதிய தொடர்பு கோபுரங்களை அமைப்பதற்கு மேலதிகமாகää ஏற்கனவே அமைக்கப்பட்ட டயலொக் தொடர்பு கோபுரங்களின் கொள்திறனை அதிகரிப்பதிலும் ‘டயலொக்’ நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய, தற்போதைய ‘கோவிட்-19’ பரவல் சூழ்நிலையின் கீழ்  2,831  கைபேசி 4G தொடர்பு கோபுரங்கள் மற்றும் 1816 நிலையான ‘புரோட்பேன்ட்’தொடர்பு கோபுரங்கள் ஆகியவற்றின் கவரேஜினை அவ்வாறே அதிகரிப்பதிலும் டயலொக் நிறுவனம் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையும் தனித்துவமாக அமைந்துள்ளது.

மேலும், இந்த வருட இறுதியின் போது தனது கோபுர வலையமைப்புகளுள் 75% ஆன கோபுரங்களின் கொள்திறனை இவ்வாறே அதிகரிப்பதற்கு ‘டயலொக்’ ஏற்பாடுகளை செய்துள்ளது..

மேலும், புதிய முதலீடுகளினூடே 4G வலையமைப்பின் அதிர்வெண் சலுகையை இரட்டிப்பாக அதிகரிப்பதற்கும் டயலொக்கினால் சாத்தியப்பட்டுள்ளது. இந்த கால இடைவெளிக்குள் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் 2G மற்றும் 3G ஆகியவற்றின் அதிர்வெண்கள் 4G ஆக மாற்றுதலும் டயலொக் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. இதனூடே ஏனைய வலையமைப்புகளுடன் ஒப்பிடுகையில் டயலொக்கிற்கு கிடைக்கின்ற அதிகரித்த கேள்விகளின் மத்தியில் மென்மேலும் செயற்பாட்டு ரீதியில் உயர்ரக சேவையை வழங்க முடிந்துள்ளது.

இதற்கிடையே, எந்தவொரு பிள்ளையும் கைவிடப்படாத வகையில் அவர்களின் online மூலமான கற்றல் முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு ‘நெனகிரி டேட்டா புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 1லட்சம் (1000000) பாடசாலை மாணவர்களின் ‘டேட்டா’ தேவைகளை தீர்க்கும் பொருட்டு ‘டேட்டா புலமைப்பரிசில்’ களை வழங்குவதற்கு டயலொக் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன், பிள்ளைகளது கல்வித் தேவைகளை நிறைவேற்றுவதை இலக்காகக்கொண்டு மாதத்திற்கு ரூ.165 என்ற குறைந்த கட்டணத்தில் ZOOM மற்றும் Microsoft Teams பாவனைக்கென 25GB ஐக் கொண்ட ‘டேட்டா பக்கேஜ்’ ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கும் டயலொக் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதுவரையில், 2.8 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீட்டாளராக செயற்படுகின்ற டயலொக், இவ்வாறு அடிப்படை தேவைகளை மேம்படுத்தும் நோக்கில் 2021ஆம் வருடத்திற்கென மாத்திரம் 207 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 2020  பெப்ரவரி மாதத்தில் 254.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கும் நிறுவனம் ஒப்புக் கொண்டது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க அவர்கள் இதன் போது கருத்துத் தெரிவிக்கையில், “குருணாகல் ‘திஹவ’ கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த டயலொக் தொடர்பு கோபுரத்தினூடே தொலைத்தொடர்பு சேவைகள் ஆரம்பமாகின்ற இந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொள்ளக்கிடைத்தமை மகிழ்ச்சி மிக்கதாகும். இந்த புதிய கோபுரத்தினூடே 20 கிராமங்களுக்கு கைபேசி மற்றும் ‘நிலையான புரோட்பேன்ட்’4G ‘கவரேஜ்’ வசதி கிடைக்கப்பெறுகின்றது. இது, இப்பகுதிகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் தமது ‘இலேர்னிங்’ கற்றல்களை மேலும் அர்த்தமுடையதாக்குவதற்கு மட்டுமன்றி இதன் மூலம் இப்பிரதேசம் வாழ்மக்கள் இதுவரை அவர்கள்; தாம் மேற்கொண்டிருந்த தொடர்பு முறைகளில் மாறுதலை ஏற்படுத்தி மேற்படி புதிய இணைப்புத்திறனைக் கொண்டு;; தமது செயற்பாடுகள் மற்றும் வணிக நடவடிக்கைகளை டிஜிட்டல் தளத்தில் மேற்கொள்வதற்கான வாய்ப்பும் கிட்டியுள்ளது." என குறிப்பிட்டார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் “நமது இந்த 4000ஆவது கோபுரத்தை நிறுவுகின்ற மைல்கல்லை அடைவதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு, இலங்கை முதலீட்டுச்சபை மற்றும் சம்பந்தப்பட்ட ஒழுங்குபடுத்தல் மற்றும் அதிகாரசபை நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். இத்தகைய சூழ்நிலையில் நம்மீது வைத்திருந்த நம்பிக்கை தொடர்பில் நமது வாடிக்கையாளர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்ற அதேவேளை, மேற்படி பணிகளை வெற்றிகரமாக விரைந்து நிறைவேற்றியமைக்காக நமது பங்குதாரர்களுக்கும் நாம் நன்றிகளை தெரியப்படுத்துகின்றோம். மேலும், வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கும் செயலெல்லையை (கவரேஜ்) மேலும் பரந்துபட்டதாக்குவதற்கும் டயலொக் நிறுவனம் எப்போதும் ஆர்வமுடன் செயற்படும்

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம தொழிநுட்ப அதிகாரி பிரதீப் டி அல்மேதா அவர்கள் இது தொடர்பில் தனது கருத்துக்களை தெரிவிக்கையில், “நாட்டின் மிகுந்த க~;டப் பிரதேசங்களையும் உள்வாங்கியவாறு திட்டங்களை முன்னெடுப்பதே நமது இலக்குகளுள் ஓர் அங்கம் என்பதற்கிணங்க 4000ஆம் மைல்கல் எனும் அடைவின் மூலம், ‘திஹவ’ கிராமத்தின் மக்களுக்கு இந்த புதிய தொடர்பு கோபுரத்தை ஒப்படைக்க கிடைத்துள்ளமை மிகுந்த மகிழ்ச்சிக்குரியதே. நாட்டின் தற்போதைய கொவிட்-19 பரவல் சூழ்நிலையில் நாடுபூராகவும் தொலைத்தொடர்பு இணைப்புக் கோரிக்கைகள் (விண்ணப்பங்கள்) பெருமளவில்  அதிகரித்துள்ள நிலையின் காரணமாக அவற்றை ஈடேற்றும் வகையில் இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் நமது வாடிக்கையாளர்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்கும் பொருட்டு நாட்டில் நிலவிவருகின்ற தொற்றுப் பரவல் சு10ழ்நிலையிலும் நாம் ரூபா 50.9 மில்லியன் நிதியை முதலீடு செய்துள்ளோம் என்றார்.


Add new comment

Or log in with...