கொவிட்-19 இனை எதிர்த்து VirusGuard+ இனை அறிமுகப்படுத்தும் Nippon Paint | தினகரன்

கொவிட்-19 இனை எதிர்த்து VirusGuard+ இனை அறிமுகப்படுத்தும் Nippon Paint

ஆசியாவின் முன்னணி வண்ணப்பூச்சு மற்றும் தீந்தை ( paint & coatings) உற்பத்தியாளர்களான Nippon Paint, அதன் மேம்பட்ட வண்ணப்பூச்சு தொழில்நுட்பமான VirusGuard+ (வைரஸ் கார்ட்+) இனை அண்மையில் இலங்கையில் அறிமுகப்படுத்தியது. நுண்ணுயிர்களுக்கு எதிரான பண்புகளைக் கொண்ட பிரீமியம் உள்ளக வண்ணப்பூச்சின் இலங்கைக்கான அறிமுகத்திற்கு முன்னர், சிங்கப்பூரின் அறிமுகத்தில் பெரு வரவேற்பை பெற்றதுடன், முதன் முதலாக 2020 இன் இறுதியில், மலேசியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

இவ்வண்ணப்பூச்சுகளானவை, செப்பு அயனினால் (Cu+) செறிவூட்டப்பட்டுள்ளதன் மூலம், தற்போது நிலவும் கொவிட்-19 திரிபுக்கு எதிரான உரிய பாதுகாப்பை வழங்குவதோடு, கழுவி துடைக்கக் கூடிய வகையிலானதுமாகும். கறை எதிர்ப்பு மற்றும் குறைந்த VOC (Volatile Organic Compounds - ஆவியாகும் சேதன மூலகங்கள்) ஆகிய தன்மைகளைக் கொண்டுள்ளது. VirusGuard+ இல் எந்தவொரு அபாயகரமான பொருட்களும் சேர்க்கப்படவில்லை என்பதால் வர்த்தக கட்டடங்கள், பொது இடங்கள் மற்றும் மேற்பரப்புகளில் ஏற்படும் மாசுக்களை அகற்றுவதால் வீடுகளுக்கும் பொருத்தமானதாகும்.

Nippon Paint VirusGuard+ பக்டீரியா எதிர்ப்பு வண்ணப்பூச்சானது, மூன்றாம் தரப்பு ஆய்வகங்களால் மருத்துவ ரீதியாக சோதிக்கப்பட்டுள்ளதுடன், மனித கொரோனா வைரஸ்கள் மற்றும் Feline Calicivirus (approved by EPA to replace Human Norovirus - மனித நோரோவைரஸை மாற்றீடு செய்வதற்காக EPA ஆல் அங்கீகரிக்கப்பட்டது) ஆகியவற்றிற்கு எதிரானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணப்பூச்சு சிங்கப்பூர் பசுமை கட்டட சபையினால் (Singapore Green Building Council - SGBC) சூழல் நட்பானது என சான்றளிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய திருப்புமுனையுடன் கூடிய தயாரிப்பு தொடர்பில் Nippon Paint இன் Head-of-Sales மிஹிரன் ஓபாத தெரிவிக்கையில், “ஒன்றல்ல, இரண்டு வைரஸ் எதிர்ப்பு தீர்வுகளை சந்தையில் அறிமுகப்படுத்திய முதல் வண்ணப்பூச்சு தரக்குறியீடாக இருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.


Add new comment

Or log in with...