கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வந்த 3 பஸ்கள் தடுத்து நிறுத்தம்

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வந்த 3 பஸ்கள் தடுத்து நிறுத்தம்-3 Buses Apprehended for Violating Provincial Travel Restrictions

- அன்ரிஜன் சோதனையில் மூவருக்கு கொரோனா தொற்று அடையாளம்

மாகாணங்களுக்கிடையிலான பிரயாணத் தடையை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த மூன்று சொகுசு பஸ் வண்டிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி D.M.A. சமரகோன் தெரிவித்தார்.

இந்த பஸ் வண்டிகளில் 49 பயணிகள் இருந்ததாக பொலிஸார் கூறினர். இவர்களுக்கு மேற்கொண்ட அன்ரிஜன் பரிசோதனையில் மூன்று பேருக்கு கொவிட் தொற்று அடையாளம் காணப்பட்டதாக ஏறாவூர்ப் பற்று பிரதேச சுகாதார வைத்தியதிகாரி இ. சிறிநாத் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வந்த 3 பஸ்கள் தடுத்து நிறுத்தம்-3 Buses Apprehended for Violating Provincial Travel Restrictions

தும்பாலஞ்சோலை இராணுவ முகாம் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்த பஸ் வண்டிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலிருந்து நான்கு மாகாணங்களைக் கடந்து கொழும்பிற்குச்சென்று திரும்பிவரும் வழியில் பாதுகாப்புத் தரப்பினரால் சோதனையிடப்பட்டபோது அவர்களிடம் விசேட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பாதை அனுமதியோ இருக்கவில்லையெனத் தெரியவந்துள்ளது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வந்த 3 பஸ்கள் தடுத்து நிறுத்தம்-3 Buses Apprehended for Violating Provincial Travel Restrictions

இந்த பஸ் வண்டிகளின் சாரதிகள் மற்றும் நடாத்துநர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்ட பயணிகள் கரடியனாறு கொவிட் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த பஸ் வண்டியிலிருந்த ஏனைய பயணிகள் அன்ரிஜன் பரிசோதனையினையடுத்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

(ஏறாவூர் நிருபர் நாஸர்)


Add new comment

Or log in with...