47வது கோபா அமெரிக்கா கால்பந்து: காலிறுதியில் ஆர்ஜென்டினா | தினகரன்

47வது கோபா அமெரிக்கா கால்பந்து: காலிறுதியில் ஆர்ஜென்டினா

மெஸ்சி தலைமையிலான ஆர்ஜென்டினா, பராகுவே அணியை வீழ்த்தி காலிறுதிக்கான இடத்தை உறுதி செய்துள்ளது.

47-வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது.

‘ஏ’ பிரிவில் உள்ள ஆர்ஜென்டினா- பராகுவே அணிகள் மோதின. இதில் ஆர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 10-வது நிமிடத்தில் பப்பு கோம்ஸ் கோல் அடித்தார்.

ஆர்ஜென்டினா பெற்ற 2-வது வெற்றியாகும். ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் உருகுவேயை வீழ்த்தி இருந்தது. சிலியுடன் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இதன் மூலம் ஆர்ஜென்டினா கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் பொலிவியாவை 28-ஆம் திகதி எதிர்கொள்கிறது.

இதே பிரிவில் உருகுவே- சிலி அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. சிலி அணி ஒரு வெற்றி, 2 சமநிலையுடன் 5 புள்ளிகளை பெற்று கால் இறுதியை உறுதி செய்துள்ளது. ‘பி’ பிரிவில் இருந்து பிரேசில் 2 வெற்றியுடன் ஏற்கனவே கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...