எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ அனர்த்தம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ரூ.5 கோடி நிதியுதவி

கொழும்பு துறைமுகத்துக்கருகாமையில் தீ அனர்த்தத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நட்ட ஈடு வழங்கும் நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் அதன் மனிதாபிமான நிதியின் மூலம் ஐந்து கோடி ரூபா நிதியைப்பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளது.

அதற்கிணங்க கொழும்பு,கம்பஹா,களுத்துறை, புத்தளம், மற்றும் மாத்தறை மாவட்டங்களிலிருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்நிதியிலிருந்து நட்ட ஈட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேச கடற்பரப்புக்குள் சில பகுதிகளில் மீன்பிடித் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முன்னுரிமையளித்து நேரடியாக இந்த நிதி மூலம் நட்ட ஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை மேற்கு கடற்பகுதியில் கரையொதுங்கும் நச்சுப் பொருட்களை நீக்குவதற்கான வேலைத்திட்டம் உள்ளூராட்சி சபைகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கும் இந்த நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...