விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விபரம் | தினகரன்

விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விபரம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உள்ளிட்ட 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ள 16 தமிழ் அரசியல் கைதிகளின் விபரமும் வெளிவந்துள்ளது. இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் நடராஜா சரவணபவன், புருஷோத்தமன் அரவிந்தன், இராசபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், நளன் சிவலிங்கம், சூரியமூர்த்தி ஜீவோகன், சிவப்பிரகாசன் சிவசீலன், மயில்வாகனம் மாடன், சூர்யகுமார் ஜெயச்சந்திரன், (மன்னார் மாவட்டத்தில்) சைமன் சந்தியாகு, ராகவன் சுரேஸ், சிறில் இராசமணி, எம்.எம். அப்துல் சலீம், சந்தன் ஸ்ராலின் ரமேஸ், கபிரியேல் எட்வேட் யூலியன், (மாத்தளை மாவட்டம்) விஸ்வநாதன் ரமேஸ்.

அனுராதபுரம் தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...