மட்டக்களப்பில் பலத்த காற்றுடன் அடைமழை | தினகரன்

மட்டக்களப்பில் பலத்த காற்றுடன் அடைமழை

மரங்கள் வீழ்ந்து மின்சாரம் துண்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மாலை பெய்த பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாகப் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் மின்சாரமும் தடைப்பட்டது.

இதன்போது உடனடியாக செயற்பட்ட  மின்சார சபையினர் சிறிது நேரத்தில் மின்சாரத்தை வழமைக்குக் கொண்டுவந்​தனர்.

இதேநேரம் பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்ததன் காரணமாகப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டிருந்தன.

சில பகுதிகளில் மரங்கள் வீழ்ந்ததன் காரணமாகக் கட்டடங்கள் சேதமடைந்தன. மட்டக்களப்பு தேர்தல் திணைக்களத்தின் மதிலும் சேதமடைந்ததைக் காணமுடிந்தது.

நேற்று காலை தொடக்கம் மட்டக்களப்பு மாநகரசபையின் அனர்த்த முகாமைத்துவ குழுவினர் முறிந்து வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்றன.

 


Add new comment

Or log in with...