பசில் ராஜபக்‌ஷ அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார்

பசில் ராஜபக்‌ஷ அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார்-Basil Rajapaksa Returned to Sri Lanka

அமெரிக்கா சென்றிருந்த, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று இலங்கையை வந்தடைந்தார்.

துபாய் வழியாக எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK 650 எனும் விமானம் மூலம் இன்று (24) முற்பகல் 8.30 மணியளவில் காட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், PCR பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தலுக்கான நடவடிக்கைக்காக சென்றுள்ளதாக, எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இரட்டை பிரஜாவுரிமை கொண்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த மே மாதம் 12 ஆம் திகதி தனிப்பட்ட காரணத்திற்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றிருந்தார்.

நாடு திரும்பிய அவருடன், அவரது மனைவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ஆகியோரும் நாடு திரும்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பசில் ராஜபக்ஷவை விமான நிலையத்தில் வரவேற்க, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா ஆகியோர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தாக, எமது செய்தியாளர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...