ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தெரிவு

போர்த்துக்கல் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ குட்டரெஸ் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 9-வது பொதுச் செயலாளராக போர்த்துக்கல் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ-குட்டரெஸ் (72) கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் திகதி முதல் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் நடந்தன.

சமீபத்தில் நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச் செயலாளராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொது செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 2026-ம் ஆண்டு டிசம்பர் 31-ம்திகதி வரை தொடரும்.


Add new comment

Or log in with...