பிரித்தானியமுன்னாள் சபாநாயகர் ஜோன் பெர்கோவ் தொழிற்கட்சியில் இணைவு ! | தினகரன்

பிரித்தானியமுன்னாள் சபாநாயகர் ஜோன் பெர்கோவ் தொழிற்கட்சியில் இணைவு !

கன்சர்வேடிவ் சட்டமன்ற உறுப்பினராக தனது அரசியலை தொடங்கிய பிரித்தானிய பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஜோன் பெர்கோவ் தொழிற்கட்சியில் இணைந்துள்ளார்.

பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான கன்சர்வேடிவ்கள் “பிற்போக்குத்தனமான, ஜனரஞ்சகவாத, தேசியவாத மற்றும் சில சமயங்களில் இனவெறி கொண்டவர்கள்” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சபாநாயகராக இருந்த காலத்தில் பிரெக்ஸிற் செயன்முறை குறித்து சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்திருந்த அவர், அரசாங்கம் மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இருப்பினும் தொழிற்கட்சியில் இணையும் அவரது முடிவு எவரையும் ஆச்சரியப்படுத்தாது என அரசாங்கத்தின் மூத்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Add new comment

Or log in with...