கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் | தினகரன்

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம்

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம்-No-Confidence Motion Against Udaya Gammanpila Handed Over to Speaker

- எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து ஐ.ம.ச. எம்.பிக்கள் ஆர்ப்பாட்ட பேரணி

எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து, வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (22) இடம்பெறும் பாராளுமன்ற அமர்விற்கு முன்னர் குறித்த ஆவணம் கையளிக்கப்பட்டதாக, எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

குறித்த ஆவணத்தில் 43 எம்.பிக்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து ஐ.ம.ச. எம்.பிக்கள், இன்று (22) காலை ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்திரேந்தனர்.

கோட்டையில் உள்ள ஐ.ம.ச. தலைமையகத்தில் இருந்து குறித்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...