சிரேஷ்ட பத்திரிகையாளர் மாலினி கோவின்னகே காலமானார் | தினகரன்

சிரேஷ்ட பத்திரிகையாளர் மாலினி கோவின்னகே காலமானார்

சிரேஷ்ட பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளரும் நுால் ஆசிரியருமான மாலினி கோவின்னகே நேற்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்படடிருந்த இவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். மாதம்பே கருக்கூவ சுகதானந்த மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்ந்தார்.

பத்திரிகைத் தொழிலை தேர்ந்தெடுத்த அவர், தருணி, டெயிலி நிவ்ஸ், சிலுமின ஆகிய பத்திரிகைகளின் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றியுள்ளார். இவர் ஏராளமான நுால்களை எழுதியுள்ளதுடன் ஏராளமான மொழிபெயர்ப்பு நுால்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் முதலாவது மொழிபெயர்ப்பு நுாலை எழுதி வெளியிடுகின்றபோது பல்கலைக்கழகத்தின் மாணவியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 2015ஆம் ஆண்டு இவர் சிறந்த அரச இலக்கியவாதிக்கான விருதையும் பெற்றுக் கொண்டார்.

 


Add new comment

Or log in with...