சமையல் எரிவாயு விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானம்

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானம்

- ரூ. 600 - 700 வரை அதிகரிக்க கோரிக்கை

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்காதிருக்க, அமைச்சரவை உப குழு தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் அதன் விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு முன்வைத்த கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு இன்று (21) காலை கூடிய, அது தொடர்பில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் சமையல் எரிவாயுவை உற்பத்தி செய்து விநியோகிக்கும் Litro Gas Lanka Ltd மற்றும் Laugfs Gas PLC ஆகிய இரு நிறுவனங்களும், எரிவாயுக்களின் விலையை அதிகரிக்க அனுமதி தருமாறு, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்திருந்தன.

கடந்த வாரம், குறித்த அமைச்சரவை உப குழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, உலக சந்தையில் எரிவாயுக்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை கருத்திற்கொண்டு, Litro Gas நிறுவனம் ரூ. 600 இனாலும், Laugfs Gas நிறுவனம் ரூ. 700 இனாலும், அதிகரிப்பதற்கு அனுமதி தருமாறு, இரு நிறுவனங்களும் கோரிக்கை விடுத்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...