நாளை அதிகாலை 12 மாவட்டங்களில் 24 கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தல்

நாளை அதிகாலை 12 மாவட்டங்களில் 24 கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தல்-Isolation Imposed in 24 GN Divisions in 12 Districts

- 12 மாவட்டங்களில் 82 கிராம அலுவலர் பிரிவுகள் விடுவிப்பு

நாளை (21) அதிகாலை 4.00 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுவதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

நாளை (21) அதிகாலை 4.00 மணிக்கு பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட போதிலும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், நுவரெலியா,இரத்தினபுரி, மாத்தளை,  காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 மாவட்டங்களைச் சேர்ந்த 82 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை (21) காலை 4.00 மணிக்கு தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாக ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாளை (21) அதிகாலை 4.00 மணி முதல் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 82 கிராம அலுவலர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளதாக, ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்படும் கிராம அலுவலர் பிரிவுகள்

கொழும்பு மாவட்டம்
தெமட்டகொடை பொலிஸ் பிரிவு:
- ஆராமய பிளேஸ்
- 66ஆவது தோட்டம்

கம்பஹா மாவட்டம்
பியாகம பொலிஸ் பிரிவு:
- யட்டிஹேன கிராம அலுவலர் பிரிவு

மீகஹவத்த பொலிஸ் பிரிவு:
-சியம்பலப்பவத்த கிராம அலுவலர் பிரிவு

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவு:
- நாஹேன கிராம அலுவலர் பிரிவு

அம்பாறை மாவட்டம்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவு:
- புதிய வளத்தாபிட்டி கிராமம்

மட்டக்களப்பு மாவட்டம்
ஏறாவூர் பொலிஸ் பிரிவு:
- ஏறாவூர் கிராம அலுவலர் பிரிவு

வலச்செனாய் பொலிஸ் பிரிவு:
- மீராவோடை கிழக்கு
- மீராவோடை மேற்கு
- மஞ்சாக்கோலாய் பதுரியா கிராம அலுவலர் பிரிவு

இரத்தினபுரி மாவட்டம்
கொலொன்ன பொலிஸ் பிரிவு:
- தாபனே கிராம அலுவலர் பிரிவு

இரத்தினபுரி பொலிஸ் பிரிவு:
- கெலந்தகல கிராம அலுவலர் பிரிவு
- முல்லே கந்த வத்த
- கொட்டல கிராம அலுவலர் பிரிவு

களுத்துறை மாவட்டம்
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவு:
- மஹவஸ்கடுவ தெற்கு

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவு:
- மினேரிதென்ன சுனாமி கிராமம்

யாழ்ப்பாணம் மாவட்டம்
மானிப்பாய் பொலிஸ் பிரிவு:
-சாவற்கட்டு கிராம அலுவலர் பிரிவு

மாத்தளை மாவட்டம்
மஹவெல பொலிஸ் பிரிவு:
- தெமத ஓயா
- நிககொல்ல
- நிககொல்ல வடக்கு கிராம அலுவலர் பிரிவு

லக்கல பொலிஸ் பிரிவு:
- கிவுலவாடிய
- குருவெல கிராம அலுவலர் பிரிவு

புத்தளம் மாவட்டம்
மாதம்பை பொலிஸ் பிரிவு:
- மரக்கலகம கிராம நிலதி பிரிவு

நுவரெலியா மாவட்டம்
கினிகத்தேன பொலிஸ் பிரிவு:
- கரோலினா தோட்டத்தின் கடவலவத்த பகுதி

காலி மாவட்டம்
இந்துருவ பொலிஸ் பிரிவு:
- கோணகல கிராம அலுவலர் பிரிவில் பொல்துடுவகம

மாத்தறை மாவட்டம்
வெலிகம பொலிஸ் பிரிவு:
- பெலேன தெற்கு கிராம அலுவலர் பிரிவு

PDF File: 

Add new comment

Or log in with...