சாய்ந்தமருது கிரிக்கட் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் | தினகரன்

சாய்ந்தமருது கிரிக்கட் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்

சாய்ந்தமருது கிரிக்கட் சங்கத்தின் பொதுக்கூட்டமும் 2021/2022ம் ஆண்டுக்கான புதிய நிருவாகத் தெரிவும் அனைவரது ஏகமனதான ஒப்புதலுடன் நாட்டின் இன்றைய சுகாதார சட்டதிட்டங்களுக்கமைவாக தொழிநுட்ப செயலியினுடாக திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 2021/2022ம் ஆண்டுக்கான புதிய நிருவாகத் தலைவராக சஹரியன் வி.கழக எம்.எச்.ஏ.கால்தீன் தெரிவு செய்யப்பட்டார். மேலும் செயலாளராக எலவன் ஹீரோஸ் வீரர் இல்யாஸ் அஸீஸூம், பொருளாளராக விளாஸ்டர் வி.கழக வீரர் எம்.ஜெ.எம். தாஜுதீனுக்கு, தவிசாளராக ஏஜ் ஸ்டீல் வி.கழக எஸ். றிழ்வான் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிர்வாக தெரிவில் மேலும் பிரதித்தலைவராக ஒஸ்மானியன் வி.கழக எம்.வை.எம். அறபாத், உப செயலாளராக வ்ரவ் லீடர்ஸ் வீரர் ஏ.எம். பாஹீர், அமைப்பாளராக வ்ரவ் லீடர்ஸ் வீரர் ஏ.எம். நளீம், நிர்வாக சபை உறுப்பினராக கிங் கோர்சஸ் வீரர் எம்.பி.எம். ரஜாய் ஆகியோரும் ஆலோசனை சபை உறுப்பினர்களாக பிராந்திய கழகங்களின் முகாமையாளர்கள், நிர்வாகிகள் என பலரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் சாய்ந்தமருது விளையாட்டு உத்தியோகத்தர் எஸ். சபூர்தீன், கிழக்கு மாகாண கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் சித்தார்த் லியனாராய்ச்சி, அம்பாறை மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எம்.பி.எம். றஜாய் உட்பட பிராந்திய கழகங்களின் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


Add new comment

Or log in with...