ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி மாணவி பலி

பெல்மதுளை பாத்தகட தோட்டத்தில் பாடசாலை மாணவி தொட்டிலில் ஊஞ்சல் ஆடும் போது கயிறு கழுத்தில் இறுகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (12) இடம்பெற்றுள்ளது. காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஆர்.சிரோமி (வயது 13) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார் .

பெல்மதுளை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இறக்குவானை தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...