எரிபொருள்களின் விலைகளில் விரைவில் திருத்தம்

எரிபொருள்களின் விலைகளில் விரைவில் திருத்தம்-Fuel Price Revision-Cabinet Sub Committee of CoL Approval

- அமுலாகும் திகதி நிதி, எரிசக்தி அமைச்சு தீர்மானிக்கும்

எரிபொருள் விலை விரைவில் அதிகரிக்கப்படுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர் இதனைத் தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அதற்கான அனுமதியை வழங்கியதற்கு அமைய, எரிபொருள்களின் விலைகளை திருத்த முடிவு செய்துள்ளதாக, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் அதிக விலையில் எரிபொருளை கொள்வனவு செய்து, குறைந்த விலையில் விற்பனை செய்வதால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 331 பில்லியன் (ரூ. 33,100 கோடி) நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...