Friday, June 11, 2021 - 6:00am
கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, பிறந்து 08 நாட்களேயான சிசு, கொவிட் தொற்று காரணமாக மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 25 ஆம் திகதி பிறந்த குழந்தை 27 ஆம் திகதி வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியிருந்தது. வீட்டுக்கு வந்ததை அடுத்து காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து குழந்தைக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. கம்பளை, புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றே இவ்வாறு மரணித்துள்ளது.
Add new comment