மிருசுவிலில் பிள்ளையார் ஆலயம் இடித்தழிப்பு | தினகரன்

மிருசுவிலில் பிள்ளையார் ஆலயம் இடித்தழிப்பு

தென்மராட்சி- மிருசுவில் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஏ9 வீதி ஓரமாகக் காணப்பட்ட பிள்ளையார் ஆலயம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை இனந்தெரியாதோரால் இடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவ்விடத்தில் விபத்து நேர்ந்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. சுமார் முந்நூறு வருடங்கள் பழமையான குறித்த ஆலயம் இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி விசேட நிருபர்

 


Add new comment

Or log in with...