யாசகர்களுக்கு கொரோனா தொற்று | தினகரன்

யாசகர்களுக்கு கொரோனா தொற்று

கம்பளை நகரில் ஒன்பது யாசகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பளை நகரிலுள்ள இ.போ.ச. பஸ் தரிப்பிட வளாகத்திலேயே அதிகளவு யாசகர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து கம்பளை இ.போ.ச. பஸ் தரிப்பிட வளாகத்திலுள்ள மேலும் 13 யாசகர்கள் நேற்று அன்டிஜன்ட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது.

தொற்றாளர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கையை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

கம்பளை நிருபர்

 


Add new comment

Or log in with...