12,13ஆம் திகதிகளில் பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு | தினகரன்

12,13ஆம் திகதிகளில் பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

நாடு முழுவதுமுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மொத்த வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளன.

விவசாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அது தொடர்பில் நேற்று தெரிவிக்கையில்;

நாட்டில் பயணத் தடை நடைமுறையிலுள்ள போதும் மொத்த வியாபாரிகள்
மற்றும் நடமாடும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வசதியாகவே இரண்டு தினங்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்களைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...