கல்முனைக்கு தடுப்பூசி வழங்குவதில் தாமதம்

பிரதமரிடம் ஹரீஸ், பைசல் முறையீடு

கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சுட்டிக்காட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  சட்டத்தரணி எச். எம்.எம். ஹரீஸ் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் ஆகியோர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து (8) கலந்துரையாடியுள்ளனர்.

இக்கலந்துரையாடலில் கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் இக்காலத்தில் 06 கொரோனா மரணங்களும் அதிகளவான தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். எனவே இந்நிலையை கருத்தில் கொண்டு கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கான தடுப்பூசியை வழங்க விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமரைக் கேட்டுக் கொண்டனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவுக்கு பணிப்புரை விடுத்தார். அதற்கமைய இராஜாங்க அமைச்சர் , சுகாதாரத் துறை அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டு கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கான தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.


Add new comment

Or log in with...