4000 மில்லிலீற்றர் கசிப்பு மீட்பு; இருவர் கைது | தினகரன்

4000 மில்லிலீற்றர் கசிப்பு மீட்பு; இருவர் கைது

சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள டிக்கோயோ சாஞ்சிமலை கீழ்பிரிவு தோட்ட 06 ஆம் இலக்க தேயிலை மலையில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவரை நேற்றுமுன்தினம் கைது செய்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்கோயோ சாஞ்சிமலை கீழ்பிரிவு தோட்ட 06 ஆம் இலக்க தேயிலை மலையில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரித்து விற்பனை செய்துவந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது அங்கு வைக்கப்பட்டடிருந்து 40 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பினையும் பாெலிஸார் மீட்டுள்ளனர்.

சுயதனிமைப்பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள சாஞ்சிமலை தோட்ட தேயிலை மலைப்பகுதியில் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இவர்களிடமிருந்து 40 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியும் விற்பனையும் மேற்கொண்டு வருகின்ற சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் பாேது தேயிலை மலையில் இரண்டு கேன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு தோட்டப்பகுதியை சேர்ந்தவர்கள் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்


Add new comment

Or log in with...