பல்கலைகழக அனுமதி விண்ணப்ப முடிவுத் திகதி ஒரு வாரம் நீடிப்பு

பல்கலைகழக அனுமதி விண்ணப்ப முடிவுத் திகதி ஒரு வாரம் நீடிப்பு-Deadline fo the Application for University Entrance Extended Till June 18

2020 - 2021 கல்வியாண்டின் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கடந்த மே 21 முதல் கோரப்பட்டுள்ளதோடு, அதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஜூன் 11 என அறிவிக்கப்பட்டிருந்தது.

உரிய விண்ணப்பத்தை இணையத்தின் ஊடாக மேற்கொள்ள வேண்டுமென்பதோடு, மாணவரின் கையெழுத்திட்ட விண்ணப்பம் தபாலின் ஊடாக அனுப்பப்பட வேண்டுமென, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

உரிய விண்ணப்பங்களுடன் தபாலகங்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கொவிட்-19 பயணக் கட்டுப்பாடுகளுக்கமைய, அதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி தற்போது ஜூன் 18 வரை மேலும் ஒரு வாரத்தால் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...