நடுத்தெருவுக்கு வரப்போகும் நயன்தாரா? | தினகரன்

நடுத்தெருவுக்கு வரப்போகும் நயன்தாரா?

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா பற்றிய காதல் கதை ஊர் அறிந்தது தான்.  தற்போது ஸ்டார் ஜோடிகளாக வலம் வரும் இந்த ஜோடியினர் பணம் சம்பாதிப்பதில்  அதிக முனைப்புக் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நயன்தாரா ஒரு பக்கம் சம்பாதிக்கும் பணத்தை விக்னேஷ் சிவன்  இன்னொரு பக்கம் பிசினஸ் செய்து வருகிறார். நல்ல விஷயம்தான் என்றாலும் இந்த  ஊரடங்கு சமயத்தில் ஏடாகூடமாக மாட்டிக் கொண்டாராம் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவன் அடுத்ததாக விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகிய  மூவரையும் வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி  வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் சில நாட்களே படப்பிடிப்பு மீதம்  உள்ளது.

விக்னேஷ் சிவன் படம் இயக்குவதையும் தாண்டி நல்ல படங்களை தயாரிக்கவும்  நல்ல படங்களை வாங்கி வெளியிடவும் முனைப்பு காட்டி வருகிறார். அந்த வகையில்  நெற்றிக்கண், ராக்கி, கூலாங்கல் போன்ற படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளன. ஆனால் தற்போது திரையரங்குகள் எதுவும் திறக்கப்படாததால் அந்த மூன்று  படமும் பெரிய நிதிச் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறதாம். இதனால் நேரடியாக  ஓடிடி ரிலீஸ் செய்யலாமா எனவும் பேசி வருகின்றனர்.

விக்னேஷ் சிவனின் இந்த தயாரிப்பு விஷயம் நயன்தாராவுக்கு கொஞ்சம்  வருத்தத்தை கொடுத்துள்ளது. கஷ்டப்பட்டு சம்பாதித்து வரும் பணத்தை ஒரே  நேரத்தில் இப்படி பல இடங்களில் சிக்க வைத்தால் வருங்காலத்தில்  நடுரோட்டுக்கு வர வேண்டியதுதான் என எச்சரித்துள்ளாராம்.


Add new comment

Or log in with...