தடுப்பூசி ஏற்றிய பின்னரும் கொவிட் தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு ஆபத்து இல்லை

தடுப்பூசி ஏற்றிக் கொண்ட பின்னரும் கொரோனா தொற்று வந்தால் உயிரிழப்பு நேராது என்று இந்தியாவின் பிரபல எய்ம்ஸ் வைத்தியசாலை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தின்கீழ் கொவிஷீல்ட், கொவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இந்த 2 தடுப்பூசிகளில் எதை ஒருவர் போட்டுக் கொண்டாலும், முதல் டோஸ் போட்டு குறிப்பிட்ட இடைவெளியில் அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்வது முக்கியம்.

ஆனால் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் கூட இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்து இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.

தடுப்பூசி போட்டும், கொரோனா வந்தாலும் அவர்களுக்கு உயிரிழப்பு போன்ற ஆபத்து நேர்வதில்லை என்று தெரியவந்துள்ளது.

இது குறித்த ஆய்வை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நடத்தி உள்ளது.

2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு கொரோனா வந்த 36 நோயாளிகளும், ஒரு டோஸ் போட்டு தொற்று பாதிப்புக்குள்ளான 27 பேரும் என 63 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 10 பேர் கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். எஞ்சியவர்கள் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்.

இவர்கள் 21 முதல் 92 வயது வரையிலானவர்கள். 41 பேர் ஆண்கள். 22 பேர் பெண்கள்.

இவர்களில் யாருமே நீரிழிவு, உயர் இரத்த அழுத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் இல்லாதவர்கள்.

நோயாளிகளின் உடலில் தடுப்பூசியால் நோய் எதிர்ப்புப் பொருள் உருவாகி இருந்தாலும், தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற நோயாளிகளைப் போலவே ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் யாருக்கும் மரணம் நேரவில்லை.


Add new comment

Or log in with...