அம்பாந்தோட்டையில் உள்ள 6 வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள்

அம்பாந்தோட்டையில் உள்ள 6 வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள்-Hospita Equipment Handed Over to Hospitals in Hambantota

கலிபோர்னியா மருத்துவமனை சேவைகள் உதவி அறக்கட்டளையிலிருந்து (Hospital Services Support Foundation (HSSF)) கொழும்பு பொது வைத்தியசாலையின், மருத்துவமனை சேவைகள் சபைக்கு கிடைக்கப் பெற்ற மருத்துவ உபகரணங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (06) அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு வழங்கி வைத்தார்.

'ருஹுணு கரலிய' அமைப்பின் வேண்டுகோளின் பேரில், கிடைக்கப் பெற்ற இம்மருத்துவ உபகரணங்கள், தங்காலை பண்டைய குடா வனவாச விகாரையில், தங்காலை மற்றும் வலஸ்முல்ல ஆதார மருத்துவமனைகள், அம்பலாந்தோட்டை, வீரகெட்டிய, கட்டுவான, சூரியவெவ ஆகிய மாவட்ட மருத்துவமனைகளுக்கும் விநியோகிக்கப்பட்டன.

அம்பாந்தோட்டையில் உள்ள 6 வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள்-Hospita Equipment Handed Over to Hospitals in Hambantota

இவ்வறக்கட்டளையினால் இதற்கு முன்னர் நாடு முழுவதுமுள்ள சுமார் 150 மருத்துவமனைகளுக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பொது வைத்தியசாலையின் மருத்துவமனை சேவைகள் சபையின் பணிப்பாளர் சங்கைக்குரிய ரஜவெல்ல சுபூதி நாயக்கதேரர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், அமைச்சர் பந்துல குணவர்தன, தென் மாகாண சபையின் தலைவர் சோமவன்ச கோதாகொட, அம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் எச்.பி. சுமணசேகர, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் தீபிகா பட்டபெந்திகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...