கொவிட் சடல வாகன பாதுகாப்புக்கு சென்ற பொலிஸ் SI விபத்தில் பலி

கொவிட் சடல வாகன பாதுகாப்புக்கு சென்ற பொலிஸஸ் SI விபத்தில் பலி -Accident-Sub Inspector killed

- 200 அடி பள்ளத்தில் வீழ்ந்த வாகனம்; சடலத்தின் உறவினர்கள் இருவர் உள்ளிட்ட 6 பேர் காயம்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் இன்று (05) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஹட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்துள்ளார்.

கொவிட் சடல வாகன பாதுகாப்புக்கு சென்ற பொலிஸஸ் SI விபத்தில் பலி -Accident-Sub Inspector killed

ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்படுவதன் பொருட்டு, ஹட்டனில் இருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில், 57 வயதான எஸ். பெனடிக் என்ற பொலிஸ் அதிகாரியே உயிரிழந்துள்ளார்.

கொவிட் சடல வாகன பாதுகாப்புக்கு சென்ற பொலிஸஸ் SI விபத்தில் பலி -Accident-Sub Inspector killed

உப பொலிஸ் பொறுப்பதிகாரி பயணம் செய்த வாகனம் வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் உப பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 3 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வாகன சாரதி, சடலத்தின் உறவினர்கள் இருவர் ஆகியோர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொவிட் சடல வாகன பாதுகாப்புக்கு சென்ற பொலிஸஸ் SI விபத்தில் பலி -Accident-Sub Inspector killed

உயிரிழந்தவர் கேகாலை பிரதேசத்தை சேர்ந்தவர் என அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக உப பொலிஸ் பொறுப்பதிகாரி பயணித்த வாகனம் சறுக்கி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் ஹட்டன் மற்றும் வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

Add new comment

Or log in with...