'அவல் என நினைத்து உரலை இடிக்கிறார் சுமந்திரன்'

- அமைச்சர் டக்ளஸ் சாட்டை

கடலுணவு உண்பது தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் ஏதும் இன்றி, உண்மையைப் பொய்யாகவும் - பொய்யை உண்மையாகவும் புரட்டி புரட்டி போடுகின்ற தொழில் திறனின் அடிப்படையில் பொறுப்பற்ற கருத்தினை சுமந்திரன் எம்.பி வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்மையில் "கடலுணவுகளை உட்கொள்தற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை" என்ற கடற்றொழில் அமைச்சரின் கருத்து பொறுப்பற்றது" என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக நேற்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கப்பல் விபத்துக்குக் காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும் என்று கருதப்படுகின்ற கடற் பரப்பில் மீன் பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு இறுக்கமான தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வடக்கு கிழக்கு உட்பட்ட நாட்டை சூழவுள்ள பாதிப்புக்கள் அற்ற கடல் பிரதேசங்களிலும் ஆழ்கடல் பிரதேசத்திலும் பிடிக்கப்படுகின்ற மீன்களே கொழும்பு உட்பட நாட்டின் அனைத்து பிரதேச சந்தைகளிலும் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன.

அவ்வாறு சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகின்ற மீன்களிலும் சந்தேகத்திற்கிடமான பதார்த்தங்கள் கலந்து இருக்கின்றதா என்பது தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியிலேயே கடலுணவுகளை உண்பதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது.


Add new comment

Or log in with...