டாம் க்ரூஸுடன் நடிக்கிறாரா பிரபாஸ்.? | தினகரன்

டாம் க்ரூஸுடன் நடிக்கிறாரா பிரபாஸ்.?

டோலிவுட்டில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக அசத்தியவர் பிரபாஸ். பாகுபலி  இவரின் இமேஜ்ஜை மாற்றியது. இந்தியா முழுக்க ரீச் ஆனார். பின்னர் இரண்டாம் பாகம் வெளியானதும் மனிதர் உலகளவில் பிரபலம் ஆனார். மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலராக சுற்றி வருகிறார். சாஹோ பயங்கர பிளாப் ஆனாலும் ராதே ஷியாம், ஆதிபுருஷ், சலார் என பிரம்மாண்ட படங்களாக உள்ளது இவரது படங்களின் லிஸ்ட்.

சமீபத்தில் பிரபாஸ் டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபில் 7 படத்தில் முக்கிய ரோலில் நடிப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது. அது மட்டுமன்றி படத்தின் இயக்குனரை இத்தாலியில் சந்தித்து ரோல் பற்றி பேசிவிட்டார் விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவார் என சொல்லப்பட்டது.

இப்படத்தின் ஐந்தாம் மற்றும் 6 வது பார்ட்டை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குவரி தான் மீண்டும் இயக்குகிறார். அவரை டேக் செய்து இந்திய ரசிகர் ஒருவர் பிரபாஸ் நடிப்பது பற்றி கேட்டார். இயக்குனர், பிரபாஸ் மிகவும் திறன் உடையவர் தான், ஆனால் நாங்கள் சந்தித்தது கிடையாது. இன்டர்நெட் உலகிற்கு வரவேற்கிறேன் என சொல்லியுள்ளார். நம் இந்தியாவில் கிளம்பிய புரளி ஹாலிவுட் வரை ரீச் ஆகிவிட்டது, படத்தின் இயக்குனரே நேரடியாக பதில் சொல்லும் நிலைமை வந்துவிட்டதே என ஆச்சர்யமாக உள்ளது.


Add new comment

Or log in with...