இலங்கை கிரிக்கட்டின் வெளிநாட்டு தொடர்களின் அனுசரணையாளராக Daraz

இலங்கை கிரிக்கட்டின் வெளிநாட்டு தொடர்களின் அனுசரணையாளராக Daraz

கிரிக்கட் ஆனது இலங்கை கலாச்சாரத்தின் மிக முக்கிய அங்கமாகும். வயதுஇ பால்இ சாதி மதங்கள் என எல்லைகள் கடந்து மக்கள் ஒவ்வொருவரினதும் இரத்தத்தில் உயிர்நாடியாக கலந்துள்ளது. Darazஇ 2021 இற்கான இலங்கை கிரிக்கட்டின் வெளிநாட்டு சுற்றுப்பயணத் தொடர்களின் உத்தியோகப்பூர்வ அனுசரணையாளராக தங்களை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றது.

2021 ஆம் ஆண்டில் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கு இலங்கை கிரிக்கட்டின் வெளிநாட்டு சுற்றுப்பயணத் தொடர்களின் உத்தியோகப்பூர்வ அனுசரணையாளராக Daraz நிறுவனம் செயற்படும். இது பங்களாதேஷ் இங்கிலாந்து தென் ஆபிரிக்கா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளுக்கெதிரான உயர்மட்ட தொடர்களை உள்ளடக்கியதாக இருக்கும். நாடு முழுவதும் காணப்படும் கிரிக்கட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்திருந்த சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

உலகளாவிய ரீதியில் இலத்திரனியல் வர்த்தக பெரு நிறுவனமான Alibaba குழுமத்தின் ஓர் துணை நிறுவனமான Daraz குழுமம் கிரிக்கட் அனுசரணையினை Daraz வர்த்தகக்குறியின் மூலோபாயத்தின் ஓர் முக்கிய தூணாக கருதுகின்றது. பல்வேறு சந்தையில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களின் விளையாட்டு மீதான அன்பிற்கு ஆதரவளிக்கும் முகமாக Darazஇ பங்களாதேஷ் தேசிய கிரிக்கட் அணிக்கும் அனுசரணை வழங்குகின்றது. பிராந்தியத்தில் கிரிக்கட்டில் அதன் முதல் இடத்தினை பதிக்கும் வகையில் இலங்கை-பங்களாதேஷ் ஒருநாள் கிரிக்கட் போட்டித் தொடரில் இரு அணிகளுக்கும் ஒரே நிறுவனமே அனுசரணை வழங்குகின்றது. பிராந்தியத்தில் தொடர்ச்சியாக இலத்திரனியல் வர்த்தகத்தின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதில் ஈடுபடுவதனால் இது தெற்காசியாவின் மிகப்பெரிய ஒன்லைன் சொப்பிங் தளத்தின் தொடர்ச்சியான துரித வளர்ச்சியினை குறித்து நிற்கின்றது.

இலங்கை Daraz நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் ரக்கில் பெர்ணன்டோ இவ் அனுசரணைப் பற்றி குறிப்பிடுகையில் “நாம் இயக்கும் சந்தைகளின் கட்டமைப்பு கலாச்சாரத்திற்குள் தன்னை ஆழமாக பதித்து பலத்திலிருந்து மென்மேலும் பலமாக வளர்ச்சியடைவதே எங்களின் இலக்கு. இவ் அனுசரணையானது அத்திட்டத்திற்கும் மற்றும் இலக்கிற்கும் ஓர் சான்றாக அமைகின்றது. வெளிநாட்டில் எங்கள் நாட்டினை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். எனவே நாம் அவர்களுக்கு அனுசரணை வழங்குகின்றோம். இது இலங்கைக்கான எங்களின் ஆதரவு மற்றும் அர்ப்பணிப்பை வலிமைப்படுத்துகின்றது.” எனக் கூறினார்.

இலங்கை கிரிக்கட்டின் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு.அஸ்லி டி சில்வா குறிப்பிடுகையில் “இலங்கை கிரிக்கட் உடன் இணைந்து செயற்பட ஆரம்பித்ததன் ஊடாக Daraz ஓர் சிறப்பான நகர்வினை முன்னோக்கி எடுத்துள்ளது. இந்நகர்வானது அவர்களின் வர்த்தகக்குறிக்கு மிகப் பெரிய பயன்களை அளிக்கும் என நம்புகிறேன்” எனக் கூறினார.

இது ஒன்றும் Daraz இன் முதல் கிரிக்கட் அனுசரணை அல்ல. ஜனவரி 2021 இல் இலங்கை இங்கிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் 2020 நவம்பர்-டிசம்பர் லங்கா பிரிமியர் லீக் தொடர்களுக்கும் மிக அண்மையில் இலங்கை கிரிக்கட் உடன் கூட்டு சேர்ந்தது. 2020 டிசம்பர் தென் ஆபிரிக்கா சென்சூரியன் மற்றும் ஜோஹானாஸ்பேங் ஆகிய இடங்களில் நடைபெற்ற தென்னாபிரிக்காவின் இலங்கை சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் போட்டிகளிற்கும் Daraz அனுசரணை வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...