ஜப்பான் இலங்கைக்கு அம்பியூலன்ஸ் அன்பளிப்பு

ஜப்பான் இலங்கைக்கு அம்பியூலன்ஸ் வண்டியொன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் சஞ்ஜீவ குணசேகரவின் வேண்டுகோளின் பேரில் சைகமா பிராந்தியத்திலுள்ள கவாகுச்சி நகரத்தின் மேயர் நொபுவ் ஒக்குநொக்கி மிகவும் உயர் தரத்திலான பாவிக்கப்பட்ட அம்பியூலன்ஸ் வண்டியொன்றை கடந்த 27 ஆம் திகதி கவாகுச்சி (ஜப்பான்)  நகரத்தில் நடைபெற்ற வைபவமொன்றின் போது  தூதுவருக்கு வழங்கினார்.  

தீயணைக்கும் உபகரணங்களை பெற்றுக் கொள்வது தொடர்பிலான கலந்துரையாடலொன்று இவர்கள் இவருக்குமிடையில் நடைபெற்றுள்ளது.  இந்த கலந்துரையாடலின்போது இந்த வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டது. இந்த வைபவத்தில் கவாகுச்சி நகரத்தின் மேயர் மற்றும் பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகள், தனவந்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

இந்த அம்பியூலன்ஸை இலங்கைக்கு அனுப்புவதற்கான செலவுகளை கவாகுச்சி நகரத்திலுள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனமொன்றாகிய சைனெட் கோப்பரேஷன் மற்றும் சைத்தமா பிராந்தியத்தின் ரொட்டறி கழகத்தினர் பொறுப்பெடுத்துள்ளனர்.  

கவாகுச்சி நகர மேயருக்கும் அந்த நகரத்திலே வாழ்கின்ற மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளதுடன் இலங்கைக்குள் மிக வேகமாக பரவும் கொவிட் வைரஸ் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ள தருவாயிலேயே காலத்தின் தேவையுணர்ந்து இந்த அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  

ஜப்பான்- இலங்கைக்கிடையில் 70 ஆண்டுகால இராஜதந்திர உறவுகள் நிலவுவதாக ஞாபகப்படுத்திய இரு நாட்டு மக்களுக்கிடையில் நிலவுகின்ற உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடியதுடன் இந்த இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த வேண்டுமெனவும் இதன்போது அவர்கள் தெரிவித்தார்.  

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்தும் வகையிலே இலங்கை தூதரகத்துடன் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதாக கவாகுச்சி நகரத்தின் மேயரும் சைனெட் கோப்பரேஷன் நிறுவனத்தின் அதிகாரிகளும் குறிப்பிட்டனர். 


Add new comment

Or log in with...