எழுந்து வா..! | தினகரன்

எழுந்து வா..!

இனவெறியர்கள் கொன்று குவித்த
இஸ்லாமியரின் எலும்புக் கூடுகளை
எடுத்துக் கொண்டு வா.

முஸ்லீம் தேசியத்துக்கு
வேலிக் கால்களாய்
நட்டு வைப்போம்.

அவர்கள் இரத்தம் தோய்ந்த
மண்ணை
பிசைந்து கொண்டு வா.
முஸ்லிம் தேசியத்தை வளைத்து
முஸ்லிம் கோட்டையை
கட்டி முடிப்போம்

தூக்கம் தொலைத்த
முஸ்லிம் தாய்க் குலத்துக்கு
பயிற்சி கொடு
முஸ்லிம் கோட்டையைச் சுற்றி
காவலுக்கு நிறுத்தி வைப்போம்

கூடுவிட்டு கூடுபாயும்
மாய ஜால வித்தையை
கற்றுக் கொண்டு வா!
நம் இளைஞர்களின் நரம்புகளில்
'பதுறு' படையினரைப்
புகுத்தி வைப்போம்.

- வேதாந்தி

(மே 12 இல், 77 இல் தடம் பதித்த  வேதாந்தி ஒரு சிறந்த கவிஞர், சிறந்த சிறுகதை ஆசிரியர், சிறந்த பேச்சாளர்,  வட-கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். பாராளுமன்ற  உறுப்பினர், உதவி அமைச்சர், பின்னர் அமைச்சர். ஆறு மாதத்துக்கு முன்னர்  அமைச்சுப் பதவியில் அலுத்துக் கொண்டு தனது அமைச்சர் பதவியை இராஜினாமா  செய்தவர். இறக்காமம், மதீனாபுரம் சேகு மலைச் சோலையில் தன்னைத் தேடிக்  கொண்டு பயணமாயிருப்பவர். அத்வைதம் அவர் மத அடிப்படை.இலக்கிய உலகம் அவரை வாழ்த்தும் அவரது கடைசிக் கவிதை தான் இது.

அவரது சேவைகளைப் பாராட்டி அவரது இறுதிப் பயணம் இன்னும் அர்த்தமுடையதாய் வளர பிரார்த்தித்து வாழ்த்துகிறோம்.- சமகாலப் பங்காளிகள் )


Add new comment

Or log in with...