பெலியத்தவில் மாதிரி உர ஆலையை ஸ்தாபித்த சணச

SEFEC-Model Organic Fertilizer

- பசுமை வேளாண்மையை ஊக்குவிப்பிற்கு வலு

சணச தொழில் முனைவோர் நிதி நிபுணத்துவ மையம் (SEFEC) பெலியத்தவில் ஒரு வெற்றிகரமான மாதிரி கரிம உர உற்பத்தி பிரிவொன்றினை ஸ்தாபித்து வேளாண்மை தொழில்முனைவோரின் உற்பத்தி தரத்தை உயர்த்தும் உறுதிப்பாட்டை தொடர்ந்தும் நிரூபித்து வருகிறது. இத்தகைய முயற்சிகள் மூலம், இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் நாட்டில் தொற்றுநோய்கள் விரைவாகப் பரவுவதை எதிர்த்து இலங்கையில் சிறந்த பசுமை வேளாண்மை முறைக்கானதோர் ஆரம்பத்தினை உறுதி செய்வதாகவும் SEFEC நம்புகிறது.

தரமான கரிம உரங்கள் கிடைப்பது என்பது பசுமை வேளாண்மையில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும். தரம் குறைவாக இருப்பதால், கரிம உர பயன்பாடுகள் சரியான செயல்திறனுக்காக பெரும்பாலும் பெரிய அளவில் பயன்படுத்தப்பட வேண்டும். SEFEC திட்டமான T.C.L மாதத்திற்கு சுமார் 1500 கிலோ கரிம உரங்களை உற்பத்தி செய்யும் பெலியத்த கரிம உர உற்பத்தி ஆலையின் உரிமையாளர் ரத்நாயக்க, தனது ஆலையில் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்காக சணச வங்கி மூலம் நிதி வசதியைப் பெற்றுள்ளதோடு, தனது தயாரிப்புகளை "ஹரித தயாரிப்புகள்" என்ற பெயரில் வெற்றிகரமாக விற்பனையும் செய்து வருகிறார், மேலும் இப்பிரதேச வாசிகளே இவரின் பிரதான வாடிக்கையாளர்களாக உள்ளமை குறிப்பிடத்ததொன்றாகும்.

COVID-19 க்கு பின் அவசரகால திட்டத்தின் கீழ், ஆலைக்கு மூலப்பொருட்களை வழங்குவதற்காக கால்நடை விவசாயிகள் சங்கத்தை உருவாக்க SEFEC வசதி செய்துள்ளதோடு, ஆலையின் செயற்திறனை அதிகரித்து தரமான உரத்தினை உற்பத்தி செய்ய எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

சணச இன்டர்நெஷனல் மற்றும் DID கனடா (டெவலப்மென்ட் இன்டர்நேஷனல் டெஸ்ஜார்டின்ஸ்) ஆகியோரால் 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சணச தொழில்முனைவோர் நிதி நிபுணத்துவ மையம் (SEFEC) தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பிரிவுகளில், மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) நிலையான வளர்ச்சியை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு அனைத்து பிரிவுகளிலும் சிறந்ததோர் செயற்திறனுடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்காற்றி வருகின்றது. 2020 ஏப்ரல் கொவிட் - 19 தாக்கத்தின் பின்னர், பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கும் உதவிடும் நோக்குடன் ஓர் அவசர திட்டம் உருவாக்கப்பட்டதோடு, 6 மாத காலத்தினுள் கனடா வழங்;கிய 77.7 மில்லியன் ரூபா சிறுதொழில், விவசாயிகள் மற்றும் கிராமப்புற பெண்கள், தொழில்முனைவோருக்கான பயிர் பல்வகைப்படுத்தல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. மேலும் சுற்றுலா துறையினை மீளமைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டமை விசேடம்சமாகும்.


Add new comment

Or log in with...