அமெசான் பதவியில் இருந்து விலகுகிறார் ஜெப் பெசோஸ் | தினகரன்

அமெசான் பதவியில் இருந்து விலகுகிறார் ஜெப் பெசோஸ்

அமெசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து ஜெப் பெசோஸ் ஜூலை 5ஆம் திகதி விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஒன்லைனில் புத்தகங்களை விற்பனை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட அமெசான் நிறுவனம் இன்று உலகின் முன்னோடி மின்னணு வர்த்தக நிறுவனமாக விளங்கி வருகிறது.

இந்த நிறுவனம் 27 ஆண்டுகளுக்கு முன் 1994ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதே தினத்தில் தமது பதவியில் இருந்து விலகும் அறிவிப்பை ஜெப் பெசோஸ் வெளியிட்டுள்ளார்.

அவரது பொறுப்பை அண்டி ஜெஸ்ஸி ஏற்றுக் கொள்வார் என்று பெசோஸ் தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டத்தில் தமது முடிவை பெசோஸ் வெளியிட்டதாக மூத்த தொழில்நுட்ப செய்தியாளர் டேவ் லீ தெரிவித்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் இவரது ப்ளூ ஒரிஜின் நிறுவனம் கவனம் செலுத்தி வருவதால், பதவி விலகிய பின்னர் அதில் ஜெப் பெசோஸ் கூடுதல் நேரத்தை செலவிடுவார் என்று வொஷிங்டன் போஸ்ட் செய்தி கூறுகிறது.


Add new comment

Or log in with...