தள்ளு வண்டியில் முகக்கசவமின்றி பொருட்களை எடுத்துச் சென்றவர் கைது

தள்ளு வண்டியில் முகக்கசவமின்றி பொருட்களை எடுத்துச் சென்றவர் கைது-40 Year Old Arrested for Carrying Goods in a Wheelbarrow Without Face Mask

முகக்கவசமின்றி தள்ளு வண்டியில் பொருட்களை கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வர்த்தக நிலையமொன்றில் பொருட்களை கொள்வனவு செய்த குறித்த நபர், தள்ளுவண்டியொன்றில் அப்பொருட்களை வைத்து தள்ளி வரும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவி வந்தது.

அளுத்கம, தர்காநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான குறித்த நபர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

குறித்த நபர் அக்காணொளியில் முகக்கவசம் அணியவில்லை எனத் தெரிவித்து, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றையதினம் (25) பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில், வாகனங்களில் பயணம் செய்யாது, நடந்து செல்வதற்கே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக சமூக ஊடகங்களில் இது தொடர்பில் பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்ததோடு, எதிர்க்கட்சியைச் சேர்ந்த, ஹர்ஷ டி சில்வா, ஆஷு மாரசிங்க உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில்...

தள்ளு வண்டியில் முகக்கசவமின்றி பொருட்களை எடுத்துச் சென்றவர் கைது-40 Year Old Arrested for Carrying Goods in a Wheelbarrow Without Face Mask


Add new comment

Or log in with...