Tuesday, May 25, 2021 - 6:00am
நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு அமுலிலுள்ள காலப்பகுதியினுள், 2020/21 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்கும்போது, ஒன்லைன் (Online) முறையில் மாத்திரம் விண்ணப்பிப்பது போதுமானதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி ஒன்லைன் முறைமையூடாக விண்ணப்பிப்பதற்கு வசதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
Add new comment