நானுஓயா தோட்ட குடியிருப்பில் தீ; 8 வீடுகள் சேதம்; 37 பேர் நிர்க்கதி

நானுஓயா தோட்ட குடியிருப்பில் தீ; 8 வீடுகள் சேதம்; 37 பேர் நிர்க்கதி-Nanu-Oya Plantation Estate Fire-8 Houses Damaged-37 Affected

நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா சமர்செட் தோட்டப்பகுதியில் 10 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று (23) காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள்  எரிந்து தீக்கிரையாகின.

இதில் 4 வீடுகள் முழுமையாகவும், 4 வீடுகள் பகுதியளவிலும் சேதமாகியுள்ளது.

நானுஓயா தோட்ட குடியிருப்பில் தீ; 8 வீடுகள் சேதம்; 37 பேர் நிர்க்கதி-Nanu-Oya Plantation Estate Fire-8 Houses Damaged-37 Affected

இந்த வீடுகளில் குடியிருந்த 8 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் 2வது இலக்க நெருங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மக்கள் ஒண்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர்.

நானுஓயா தோட்ட குடியிருப்பில் தீ; 8 வீடுகள் சேதம்; 37 பேர் நிர்க்கதி-Nanu-Oya Plantation Estate Fire-8 Houses Damaged-37 Affected

இத்தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்தனர். ஒரு சில பொருட்கள் மாத்திரமே மக்களால் பாதுகாக்ககூடியதாக இருந்தது.

இதற்கிடையில் அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றி உரிய வகையில் இருக்குமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட இவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோட்ட வாசிகசாலையில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

நானுஓயா தோட்ட குடியிருப்பில் தீ; 8 வீடுகள் சேதம்; 37 பேர் நிர்க்கதி-Nanu-Oya Plantation Estate Fire-8 Houses Damaged-37 Affected

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அனர்த்த முகாமைத்துவ நிலையம், நுவரெலியா பிரதேச சபை ஆகியன ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் நானுஓயா பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

நானுஓயா தோட்ட குடியிருப்பில் தீ; 8 வீடுகள் சேதம்; 37 பேர் நிர்க்கதி-Nanu-Oya Plantation Estate Fire-8 Houses Damaged-37 Affected

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் பணிப்புரைக்கமைய சம்பவ இடத்தமிற்கு தலவாக்லை லிந்துல நகர சபையின் தலைவர் லெ.பாரதிதாசம் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிலிப்குமார் ஆகியோர் சென்று பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளையும். ஆவர்களுக்கு தேவையான சமைத்;த உணவுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தற்போது கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதனால் சுகாதார பொறிமுறைகளுக்கு அமைவாக அவர்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்  அவர் இதன்போது தெரிவித்தார்.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன், லிந்துலை நிருபர் - சுஜித் சுரேன், தலவாக்கலை குறூப் நிருபர் - பீ. கேதீஸ், ஹட்டன் விசேட நிருபர் - கே. சுந்தரலிங்கம், டி. சந்ரு)

Add new comment

Or log in with...