இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரை நிறுத்துகிறது மைக்ரோசொப்ட் | தினகரன்

இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரை நிறுத்துகிறது மைக்ரோசொப்ட்

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணையச் செயலியான இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதியன்று நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளாக இயங்கிவந்த இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரினை பலரும் பயன்படுத்தாமல் கூகுள் நிறுவனத்தின் கிரோம், ஆப்பிள் நிறுவனத்தின் சபாரி ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மைக்ரோசொப்ட் நிறுவனம், அதன் விண்டோஸ் 10 கணினிச் செயல்பாட்டுமுறையில் இனி விண்டோஸ் எட்ஜ் என்ற இணையச் செயலியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என அதன் வலைப்பதிவில் கூறியது.

இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரை விட விண்டோஸ் எட்ஜ் விரைவானது, பாதுகாப்பானது என்று அந்நிறுவனம் தெரிவித்தது. விண்டோஸ் எட்ஜ் பழைய இணையத்தளங்களையும் எளிதில் நாடக்கூடியது.

முன்னர் இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரில் மட்டும் செயல்படக்கூடிய இணையப்பக்கங்களை விண்டோஸ் எட்ஜில் நாடலாம். இந்தச் செயல்பாடு 2029ஆம் ஆண்டுவரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Add new comment

Or log in with...