பாராளுமன்ற வாக்கெடுப்பின் எண்ணிக்கையில் தவறிழைப்பு

அமைச்சர் அலி சப்ரி, ஜெயரத்ன ஹேரத் எம்.பி வாக்களித்தும் சேர்க்கப்படவில்லை

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தவறு இடம்பெற்றுள்ளது உறுதியாகியுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்திருந்த போதும் கணக்கெடுப்பின் போது இடம்பெற்ற தவறினால் ஆதரவாக 148 வாக்குகள் கிடைத்ததாகவே அறிவிக்கப்பட்டது. ஆதரவாக வாக்களித்த அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜெயரத்ன ஹேரத் ஆகியோரின் வாக்குகள் எண்ணிக்கையில் சேர்க்கப்படாதது பின்னரே அறியவந்தது.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இரண்டாம் வாசிப்பிற்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வாக்களிப்பின் போது ஆளும் தரப்புடன் தொடர்புள்ள 9 எம்.பிகள் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை. பொதுஜன பெரமுன எம்.பி மஹிந்த சமரசிங்க வெளிநாடு சென்றுள்ளதோடு எம்.ராமேஷ்வரன் மற்றும் இராஜாங்க  அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் சுகவீனம் காரணமாக வருகை தந்திருக்கவில்லை. விஜேதாஸ ராஜபக்ஷ எம்.பியும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதேவேளை நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜெயரத்ன ஹேரத் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தாலும் அவர்களின் வாக்குகள் பதிவாகியிருக்கவில்லை.

20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த 4 எம்.பிகள் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்திற்கும் ஆதரவாக வாக்களித்தார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிகளான அரவிந்த குமார், டயனா கமகே, இசாக் ரஹ்மான் ஆகியோரும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எம்.பி அலி சப்ரி ரஹீமும் இவ்வாறு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. எதிர்த்தரப்பில் 48 எம்.பிகளே எதிராக வாக்களித்தார்கள். இதன் போதும் ஆளும் தரப்புடன் தொடர்புள்ள 9 எம்.பிகள் சபையில் இருக்கவில்லை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது இருக்காத மஹிந்த சமரசிங்க எம்.பி(வெளிநாட்டில்)எம்.ராமேஷ்வரன் மற்றும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ( சுகவீனம் ) . விஜேதாஸ ராஜபக்ஷ எம்.பி, ஜக்கிய மக்கள் சக்தியை பிரதநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காங்கிஸ் எம்.பிகளான நஸீர் அஹமட்,பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக், எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் எம்.பி எஸ்.எம்.எம்.முஷர்ரப் ஆகியோரும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் வாசிப்பிற்கு ஆதரவாக வாக்களித்த எஸ்.பி திசாநாயக்க 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது சபையில் இருந்து வெளியேறியிருந்தார்.

ஆதரவாக வாக்களித்த எம்.பிகள் பட்டியல் இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்புகளில் ஆதரவாக வாக்களித்த எம்.பிகளின் விபரம். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான ஜீ.எல் பீரிஸ், நிமல் சிரிபால டி சில்வா, சமல் ராஜபக்ஷ,ஜோன்ஸ்டன் பெர்ணாந்து, தினேஷ் குணவர்தன,பவித்ரா வன்னியாரச்சி, டக்ளஸ் தேவனந்தா,காமினி லொகுகே, பந்துல குணவர்தன, ஜனக பண்டார தென்னகோன், சீ.பி ரத்னாயக்க, கெஹெலிய ரம்புக்வெல்ல, டளஸ் அலஹப்பெரும, விமல் வீரவங்ச, மஹிந்த சமரசிங்க, எஸ்.எம்.சந்ரசேன, வாசு தேவ நாணயக்கார , மஹிந்தானந்த அலுத்கமகே, உதய கம்மம்பில, ரமேஷ் பதிரண, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ஷ, அலி சப்ரி,சரத் வீரசேகர, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிடிய, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேம் ஜெயந்த், பிரியங்கர ஜயரத்ன, துமிந்த திசாநாயக்க, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவன்ன, சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே, அருந்திக்க பெர்னாண்டோ, நிமல் லன்சா, ஜயந்த சமரவீர, ரொஷான் ரணசிங்க, கனக ஹேரத், ஜானக்க வக்கும்புர, விஜித்த பேருகொட, ஷெஹான் சேமசிங்க, மொஹான் டி சில்வா, லொஹான் ரத்வத்த, திலும் அமுனுகம, விமலவீர திசாநாயக்க, தாரக்க பாலசூரிய, இந்திக்க அனுருத்த, கஞ்சன விஜேசேகர, சனத் நிஷாந்த, சிறிபால கம்லத், அஜித் நிவாட் , அனுராத ஜயரத்ன , சதாசிவம் வியாழேந்திரன், தேனுக விதானகமகே, சிசிர ஜயக்கொடி, பியல் நிஷாந்த டி சில்வா, பிரசன்ன ரணவீர, டி. வீ. சானக்க, டி.பி. ஹேரத், ஷஷீந்திர ராஜபக்ஸ, நாலக்க கொடஹேவா, ஜீவன் தொண்டமான், அஜித் நிவாட் கப்ரால், சீதா அரம்பேபொல, சன்ன ஜயசுமன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டபிள்யு செனவிரத்ன, அநுர பிரியதர்சன யாப்பா, எம்.எல்.எம்.அதாவுல்லா, திஸ்ஸ விதாரன, டிலான் பெரோரா, ஜகத் புஷ்பகுமார, ஜெயரத்ன ஹேரத், சந்திம வீரக் கொடி, ரோஹன திசானாயக்க, பிரேமலால் ஜெயசேகர, சாந்த பண்டார, சாரதி துஷ்மந்ம, காதர் மஸ்தான், அசோக்க பிரியந்த ஜெயந்த கோட்டேகொட, மொஹமட் முஸம்மில், டிரான் அலஸ், அரவிந்த குமார், அமரகீர்த்தி அதுகோரள, கபில அதுகோரள, சம்பத் அதுகோரள, திஸ்ஸகுட்டியாரச்சி, சுமித் உடுகும்புர, பிரதீப் உதுகொட, சந்ஜீவ எதிரிமான்ன, அகில எல்லாவல, லலித் எல்லாவல, சமிந்த கிரிதிகொட, ஜகத் குமார, கீதா குமாரசிங்க, கே.பி.எஸ் குமாரசிங்க, கருணாதாஸ கொடிதுவக்கு, நாளக பண்டார, உபுல் கலப்பத்தி, உதயகாந்த குணதிலக, கோகிலா குணவர்தன, சிவனேசத்துறை சந்ரகாந்தன், மிலான் ஜெயதிலக, குலசிங்கம் திலீபன், பிமித பண்டார, சான் விஜேலால்த சில்வா, சாமர சம்பத் தசனாயக்க, சுதர்சன தெனிபிடிய, இசுரு தொடங்கொட, சாகர காரியவசம், அலிசப்ரி ரஹீம்,அதுரலிய ரதன தேரர், இசாக் ரஹ்மான், பிரேமனாத் தொலாவத்த, எச்.நந்தசேன, கயேசான் நவரத்ன, அஸங்க நவரத்ன, அனுப பெஸ்குவல், நிமல் பியதிஸ்ஸ, முதிதா பிசாந்தி, உத்திக பிரேமரத்ன, நளின் பெர்ணாந்து, சுதத் மஞ்சுல, சிந்தக மாயதுன்ன,வசந்த பண்டார, நிபுண ரணவக்க, குணபால ரத்னாயக்க, குமாரிசிரி ரத்னாயக்க, அஜித் ராஜபக்ஷ, குணதிலக ராஜபக்ஷ, திலக் ராஜபக்ஷ, உபுல் மஹேந்தி , காமினி வலேகொட, ராஜிகா விக்ரமசிங்க, சஹன் பிரதீப் விதாரன,மதுர விதாரன, டீ.வீரசிங்க, வீரசுமன வீரசிங்க, சமன்பிரிய ஹேரத், கெவிது குமாரதுங்க, யதாமினி குணவர்தன, மஞ்சுலா திசானாயக்க, ரஞ்சித் பண்டார, சுரேன் ராகவன், ஜெயந்த வீரசிங்க, சரித ஹேரத், மர்ஜான் பளீல், டயனா கமகே ஆகிய எம்.பிகள் ஆதரவாக வாக்களித்தார்கள்.

ஷம்ஸ் பாஹிம். சுப்ரமணியம் நிசாந்தன்


Add new comment

Or log in with...