OPPO Enco Air அறிமுகம் - உயர் செயல்திறன்/ குறைந்த தாமதம் கொண்ட உலகின் முதலாவது மெய்யான Wireless Earphones | தினகரன்

OPPO Enco Air அறிமுகம் - உயர் செயல்திறன்/ குறைந்த தாமதம் கொண்ட உலகின் முதலாவது மெய்யான Wireless Earphones

OPPO Enco Air அறிமுகம் - உயர் செயல்திறன்/ குறைந்த தாமதம் கொண்ட உலகின் முதலாவது மெய்யான Wireless Earphones-OPPO Acoustics world's first true Wireless Earphones with High-PerformanceLow Latency in SL

உலகளாவிய முன்னணி ஸ்மார்ட் சாதன தரக்குறியீடான OPPO, OPPO A54 இனை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னணி உலகளாவிய ஸ்மார்ட் சாதன OPPO Enco Air அறிமுகம் - உயர் செயல்திறன்/ குறைந்த தாமதம் கொண்ட உலகின் முதலாவது மெய்யான Wireless Earphones-OPPO Acoustics world's first true Wireless Earphones with High-PerformanceLow Latency in SLபிராண்டான OPPOவின் ஒரு பகுதியான OPPO ஒலியியல் சாதனமான OPPO Enco வரிசையில் அதன் புதிய சேர்க்கையான, புதிய OPPO Enco Air True Wireless Earphone களை வெளியிட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற ஜேர்மனிய தொழில்நுட்ப சோதனை நிறுவனமான TÜV Rheinland இனது மெய்யான Wireless Earphone களுக்கான உயர் செயற்திறன் / குறைந்த தாமத சான்றிதழைப் கொண்டுள்ள உலகின் முதலாவது மெய்யான கம்பியற்ற இயர்போன்களாக, OPPO Enco Air திகழ்கிறது. இது அதன் விரிவான earphone சோதனையை வெற்றிகரமாக கடந்து அச்சான்றிதழை பெற்றுள்ளது. OPPO Enco Air இச்சான்றிதழைப் பெற்றுள்ளதன் மூலம், அதன் குறிப்பிடும்படியான செயற்றிறனை காட்டுவதோடு, வெறும் உரிமைகோரல்களுக்கு அப்பாற்பட்டது என்பதையும் நிரூபித்துள்ளதுடன், அது சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டைல் சௌகரியத்துடன் இணைகிறது
OPPO Enco Air சார்ஜிங் கேஸ் (charging case) ஆனது, பார்ப்பதற்கு அழகான மெட் அமைப்பைக் (matte texture) கொண்டுள்ளது. இது தொட்டு உணர்வதற்கு ஆடம்பரமான உணர்வை வழங்குவதுடன், அதன் மேற்புறமான மூடி, ஒளிஊடுருவக்கூடிய வடிவமைப்புடன் கண்களைக் கவரும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இவை வெள்ளை, கறுப்பு (misty white, misty black) ஆகிய இரண்டு நிறங்களில் கிடைப்பதுடன், அனைத்து பாகங்களும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

வசதியாக அணிவதை உறுதி செய்வதற்காக, மனித காதுக்கு உறுதியாகவும், வசதியாகவும் பொருந்தும் வகையில் பரிசோதிக்கப்பட்டு, OPPO Enco Air ஆனது, அரைக் காது வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. மிகவும் பாரம் குறைவான வகையில் 3.75 கிராம் நிறையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், பயனர்கள் தங்களது கருவிகளை அணிந்திருப்பதை மறந்துவிட வாய்ப்புள்ளது. இந்த இயர்போன்கள் நாளாந்த நடவடிக்கையினைத் தாங்கும் IPX4 நீர் எதிர்ப்பு தன்மையை கொண்டுள்ளதால், நாளின் எச்சந்தர்ப்பத்திற்கும் பொருத்தமானதாக இருக்கும்.

OPPO Enco Air அறிமுகம் - உயர் செயல்திறன்/ குறைந்த தாமதம் கொண்ட உலகின் முதலாவது மெய்யான Wireless Earphones-OPPO Acoustics world's first true Wireless Earphones with High-PerformanceLow Latency in SL

விசேட Bass மேம்படுத்தல் குழாய்கள் மற்றும் 12 மி.மீ. கலப்பு தைத்தேனியம் இயக்கிகளுடன் இணைக்கப்பட்டு, அட்த்தியான, வலுவான Bass மற்றும் இனிமையான நடுத்தர ஒலி முதல் சமச்சீரான கலவையுடனான Treble தொனிகளையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. OPPO Blu-ray குழுவின் நிபுணத்துவம் வாய்ந்த சரிப்படுத்தல் பணி மூலம், இந்த ஒலி கட்டமைப்பின் சமநிலை சாத்தியமாகியுள்ளது. OPPO Enco Air ஆனது, Advanced Audio Coding-AAC மற்றும் Sub-Band Codec-SBC ஆகியவற்றை ஆதரிக்கிறது. இவை இரண்டும் பயனர்களுக்கு மிகவும் விரிவான, மெய்யான மற்றும் உயர்தர ஓடியோ அனுபவத்தை வழங்குவதற்கா வடிவமைக்கப்பட்டுள்ளன.

சார்ஜிங் கேஸ் ஆனது, பயனர்கள் 10 நிமிட சார்ஜிங் மூலம் 8 மணிநேரம் ஒலியை வழங்கவும், பூரண சார்ஜிங்கின் மூலம் 24 மணிநேரம் வரையான, நாள் முழுவதும் இசையை கேட்பதற்கு ஏற்றதாக இருக்கும்.

OPPO Enco Air ஆனது, உச்ச  AI அழைப்பின் போதான வெளி இரைச்சலை-இரத்துசெய்யும் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஸ்மார்ட் செயற்பாடாகும், ஒவ்வொரு பயனரும் பாராட்டும் வகையிலான, மிகத் தெளிவான அழைப்பு அனுபவத்தை வழங்க இது உதவுகிறது. நிலையற்ற அல்லது ஒத்திசையாத ஒலி தொடர்பில் கவனம் செலுத்தும் பயனர்களுக்காக, இந்த இயர்போன் ஆனது, நவீன Bluetooth 5.2 Chip இனை  கொண்டுள்ளதால், ஒலித் தரவுப் பரிமாற்ற நிலைத்தன்மையை அதிகரிக்கவும், குறுக்கீடுகளை எதிர்த்தும் செயற்படுகின்றன. OPPO இன் தாமதத்தைக் குறைக்கும் Game Mode பயன்முறையுடன் இணைந்து, OPPO Enco Air மென்பொருள் மற்றும் வன்பொருள் தீர்வுகளை ஒருங்கிணைத்து மென்மையான, ஒத்திசைவான ஒலி வெளிப்பாட்டு அனுபவத்தை வழங்குகிறது. சாதனத்துடன் இணைப்பை ஏற்படுத்துதவதை ஒரு தொந்தரவாக கருதும் பயனர்களுக்கு, விரைவான இணைத்தல் அம்சத்தை OPPO உருவாக்கியுள்ளது. இது பயனர் சார்ஜிங் கேஸ் மூடியைத் திறக்கும்போது உடனடியாக இணைப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்பயனாக்கக்கூடிய தொடு கட்டுப்பாடுகள் மற்றும் குரல் உதவி போன்ற மேலதிக வசதியான அம்சங்களும் இதில் இணைக்கப்பட்டு, பிரீமியம் அனுபவத்தை ஆரம்ப நிலை விலையில் வழங்குகிறது.

OPPO Enco ஆனது, ரூ. 16,990 எனும் விலையில், நாடு முழுவதுமுள்ள அனைத்து OPPO விற்பனை நிலையங்கள், அபான்ஸ், சிங்ககிரி மற்றும் டயலொக் காட்சியறைகள் வழியாகவும், BuyAbans மற்றும் Daraz.lk உள்ளிட்ட ஒன்லைன் விற்பனைத் தளங்கள் மூலமாகவும் கிடைக்கும்.

OPPO Sri Lanka பற்றி
முன்னணி ஸ்மார்ட்போன் நாமமான OPPO, அதன் முதலாவது ஸ்மார்ட் போனை 2008 இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அழகியல் திருப்தி மற்றும் புதுமையான தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து இடைவிடாமல் தொடர்ந்து வருகிறது. இன்று, OPPO தனது வாடிக்கையாளர்களுக்கு Find மற்றும் Reno தொடர்களின் கீழான பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை வழங்குகிறது, ColorOS இயங்குதளம், அதே போன்று OPPO Cloud மற்றும் OPPO + போன்ற இணைய சேவைகள். OPPO, 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் இயங்குகிறது. உலகளாவிய ரீதியில் 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 5 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அத்துடன் லண்டனில் ஒரு சர்வதேச வடிவமைப்பு மையத்தையும் கொண்டுள்ளது. OPPO இன் 40,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாழ்வியலை உருவாக்க அர்ப்பணித்துள்ளனர்.
2015 இல், இலங்கையில் செல்பி மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் நுண்ணறிவு மென்பொருள்களுக்காக, OPPO அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதோடு, அதன் முதன்மை ‘F’ தொடர் மற்றும் பிரபலமான Reno தொடர் மூலம் பல மொடல்கள் மூலம், பரந்துபட்ட நுகர்வோர் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது. OPPO Sri Lanka ஆனது, அபான்ஸ், சிங்ககிரி, டயலொக், டாராஸ் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட OPPO விற்பனையாளர்களுடன் வலுவான கூட்டிணைப்பைக் கொண்டுள்ளதுடன், அவை OPPO நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களை சென்றடைய உதவுகின்றன.


Add new comment

Or log in with...