நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டபோதிலும் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் தொழில்களை மேற்கொள்ள எவ்வித தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஏற்றுமதி தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை மேற்கொண்டு செல்வதற்கும், சுகாதார பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு பாதிப்பின்றி நடாத்துவதற்குமாக, அநாவசியமான பயணங்களை கட்டுப்படுத்துவதாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் மே 24, 25 ஆம் திகதிகளில் திறக்கப்பட்டிருக்குமென, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
குறிப்பாக, தம்புள்ளை, தம்புத்தேகம, நுவரெலியா, கெப்பட்டிபொல, வியாங்கொடை, மீகொடை, எம்பிலிபிட்டி ஆகிய பொருளதாக மத்திய நிலையங்கள் மே 24, 25, 26, 27, 28 ஆகிய தினங்களில் மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறந்திருக்கும் என, விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
Add new comment