பேசாலை காட்டில் கஞ்சா பொதிகள் மீட்பு

மன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரம் யூட் வீதி காட்டு பகுதியில் மறைத்து வைத்திருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை பேசாலை பொலிஸார் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் 14 கிலோ 175 கிராம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கஞ்சா பொதிகள் சுமார் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என தெரிய வந்துள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்ச்சி மற்றும் பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சோமயித், உப பொலிஸ் பரிசோதகர் விவேகானந் தலைமையிலான குழுவினர் மேற்படி கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.கைப்பற்றப்பட்ட கஞ்சா மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.

மன்னார் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...