துறைமுக நகர சட்டமூல சரத்துகள் சில அரசியலமைப்புக்கு முரண்

துறைமுக நகர சட்டமூல சரத்துகள் சில அரசியலமைப்புக்கு முரண்-

- நிறைவேற்ற விசேட பெரும்பான்மை, கருத்துக் கணிப்பு அவசியம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் அரசியலமைப்பிற்கு முரணான சரத்துகள் காணப்படுவதாக, உச்ச நீதிமன்றம் தனது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.

அதற்கமைய ஒரு சில சரத்துக்களை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை அவசியம் எனவும், மேலும் சில சரத்துக்களை நிறைவேற்ற வாக்கெடுப்பின் ஊடான பொதுமக்கள் கருத்து கணிப்பு அவசியம்  என, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இன்றைய (18) பாராளுமன்ற அமர்வில், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, உச்ச நீதிமன்றத்தின் குறித்த வியாக்கியானத்தை சபைக்கு அறிவித்தார்.

இதைவேளை பொதுமக்கள் கருத்துக் கணிப்பு தொடர்பான சரத்துகளை திருத்தம் செய்வதன் மூலம் அதனை பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும் என உச்ச நீதிமன்றம் தனது வியாக்கியானத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம்...

PDF File: 

Add new comment

Or log in with...