முன்னாள் எம்.பி. கே. துரைரெட்ணசிங்கம் கொரோனாவுக்கு பலி

முன்னாள் எம்.பி. கே. துரைரெட்ணசிங்கம் கொரோனாவுக்கு பலி -Former-MP-Thurairetnasingam-passes-away-from-COVID19

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் காலமானார்.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (18) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு - சேனையூரில் 1941 ஜனவரி 01ஆம் திகதி பிறந்த இவர் திருகோணமலை சேனையூர் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபராகவும், தம்பலகாமம் கோட்டக் கல்வி அலுவலகத்தின் முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் இறக்கும் போது வயது 80 த.தே.கூட்டமைப்பின் அரசியல் உச்சபீட உறுப்பினருமாவார் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் காலப்பகுதியில் மூவின சமூகத்திற்கும் சேவை செய்த சிறந்த அரசியல்வாதியாவார்.

(குச்சவெளி தினகரன் நிருபர், அன்புவழிபுரம் தினகரன் நிருபா்)


Add new comment

Or log in with...