பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகெங்கும் பாரிய பேரணி | தினகரன்

பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகெங்கும் பாரிய பேரணி

காசா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகெங்கும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவரும்படி அழுத்தம் கொடுத்து வட அமெரிக்காவின் பல நகரங்களிலும் பேரணிகள் இடம்பெற்றன.

நியூயோர்க், பொஸ்டன், வொசிங்கடன், மொன்ட்ரியல் மற்றும் டேர்போர்ன், மிச்சிகன் நகரங்களில் கடந்த சனிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. பலஸ்தீன கொடியை சுமந்தபடி இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள், பலஸ்தீனர்களின் சுதந்திரத்திற்காக அழைப்பு விடுத்தனர்.

லண்டன், பேர்லின், மெட்ரிட் மற்றும் பாரிஸ் உட்பட ஐரோப்பாவின் பிரதான நகரங்களிலும் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

அதேபோன்று ஈராக்கின் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதோடு லெபனான், கட்டார், காஷ்மிரிலும் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.


Add new comment

Or log in with...