விக்டோரியன் விளையாட்டுக் கழகம் வெற்றி | தினகரன்

விக்டோரியன் விளையாட்டுக் கழகம் வெற்றி

கொக்குவில் மத்தியசனசமூக நிலையமும், விளையாட்டு கழகமும் இணைந்து யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட சகல அணிகளையும் உள்ளடக்கி நாடாத்தப்படும் 2021 ஆம் ஆண்டுக்கான 28 ஆவது கிரிக்கெட் சுற்றுபோட்டித் தொடரின் ஆட்டம் ஒன்றில் விக்டோரியன் விளையாட்டுக் கழக அணி 5 விக்கெட்டினால் வெற்றி பெற்றது.

கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டத்தில்

வின்ஸ் விளையாட்டு கழக அணியை எதிர்த்து விக்டோரியன்ஸ் விளையாட்டு கழக அணி மோதிக் கொண்டன.

முதலில் துடுப்பெடுத்து விளையாடி வின்ஸ் விளையாட்டுக் கழக அணி 28.4 ஓவர்களில் சகல இலக்குகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் எட்வின் 29 ஓட்டங்களையும், ஸ்ரிபன் 21 ஓட்டங்களையும், தமது அணி சார்பாக பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக் கழக அணி சார்பில் செந்தூரன், சிவகரன் ஆகியோர் தலா 2விக்கெட்டுக்களையும், வீழ்த்தினர்.

பதிலுக்கு 163 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென பதிலுக்கு துடுப்பெடுத்து விளையாடிய விக்ரோறியன் விளையாட்டுக் கழக அணியினர் 22. 4 ஓவர்களில் 5விக்கெட்டுக்களை இழத்து 163 ஒட்டங்களைப் பெற்றது. இதில் அதிகபட்சமாக கிரிசாந் ஆட்டம் இழக்காமல் 72 ஓட்டங்களையும், பிரசாந் 71 ஓட்டங்களையும், தமது அணி சார்பாக, பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் வின்ஸ் விளையாட்டுக் கழக அணி சார்பில் வின்சனெட், மைக்கல் ஆகியோர் தலா 2 விக்கெட்டு க்களையும், வீழ்த்தினர்.

யாழ்.விளையாட்டு நிருபர்


Add new comment

Or log in with...