நாடளாவிய ரீதியில் மே 21 முதல் மீண்டும் பயணத் தடை | தினகரன்

நாடளாவிய ரீதியில் மே 21 முதல் மீண்டும் பயணத் தடை

நாடளாவிய ரீதியில் மே 21 முதல் மீண்டும் பயணத் தடை-Island-Wide-Travel-Restrictions-Enforced-from-May-21

நாடளாவிய ரீதியில் மீண்டும் பயணத்தடை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தள்ளார்.

அதற்கமைய,
- மே 21 (வெள்ளிக்கிழமை) இரவு 11.00 மணியிலிருந்து மே 25 (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.00 மணி வரை
- மே 25 (செவ்வாய்க்கிழமை) இரவு 11.00 மணியிலிருந்து மே 28 (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.00 மணி வரை

நாடளாவிய ரீதியில் மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏற்கனவே கடந்த மே 13ஆம் திகதி முதல் இன்று (17) அதிகாலை 4.00 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

PDF File: 

Add new comment

Or log in with...